யாழ்ப்பாணம் ஊர்க்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் வெட்டுக் காயங்களுடன் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அல்லைப்பிட்டி 03 பகுதியைச் சேர்ந்த 43 வயதான கஜேந்திரன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஊர்க்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்திற்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உடலில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டமையால் இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்க்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.