தெஹிவளை மேம்பாலத்திற்கு அருகில் இன்று (10) அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் காரின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கார் மேம்பாலத்தின் ஒருபகுதியில் மோதி விபத்துக்குள்ளானதுடன், கார் சேதமடைந்துள்ளதாகவும் சாரதியின் போக்குவரத்து விதி மீறலே விபத்துக்கான காரணமென பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.