புதுமணத் தம்பதிகள் ஸ்ரீ தலதா மாளிகைக்கு வந்து தலதா பகவானை அவமதிக்கும் வகையில் புகைப்படம் எடுத்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேவுக்கு கூட தெரிவிக்காமல் ஸ்ரீ தலதா மாளிகைக்கு வந்த தம்பதியினர், மேல் தளத்தில் உள்ள பிரதான மலர் இருக்கை உட்பட ஸ்ரீ தலதா மாளிகையின் பல்வேறு இடங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்துள்ளனர்.
பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் அதை தடுத்த போது, மற்றொரு செல்வாக்கு மிக்க தரப்பினர், பொலிஸ் அதிகாரிகளை நிர்பந்தம் செய்து, இந்த புகைப்படம் எடுத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, சம்பவம் குறித்து விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
