எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையைப் பெற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
