Friday, June 26, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோத தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

சட்டவிரோத தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

சட்டவிரோதமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட 06 பேர் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டமை தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி வேட்பாளரின் வாக்குச் சின்னத்தைக் காட்டி சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு நடத்திய போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles