Friday, June 26, 2026
28.4 C
Colombo
செய்திகள்உலகம்இரு லொறிகள் மோதி கோர விபத்து: 48 பேர் பலி

இரு லொறிகள் மோதி கோர விபத்து: 48 பேர் பலி

நைஜீரியா – அகெயி நகரில் உள்ள நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி மீது மற்றொரு லொறி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த கோர விபத்தில் 48 பேர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், 2 லொறிகளும் வெடித்துச் சிதறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த தீயணைப்பு மீட்புக்குழுவினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles