Friday, June 26, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவானிலையில் மாற்றம்

வானிலையில் மாற்றம்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில தினங்களில் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி மேல், சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று 50 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மறு அறிவித்தல் வரை வங்கக்கடலின் ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்வதை தவிர்க்குமாறு கடற்தொழிலார்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles