Wednesday, January 15, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமியன்மாரில் மீட்கப்பட்ட இலங்கையர்கள் 20 பேர் நாடு திரும்பினர்

மியன்மாரில் மீட்கப்பட்ட இலங்கையர்கள் 20 பேர் நாடு திரும்பினர்

மியன்மாரில் உள்ள முகாம்களில் இணைய குற்றங்களில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்ட 20 இலங்கையர்கள் நேற்று (05) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

16 ஆண்களும் 4 யுவதிகளும் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளதாக விமான நிலையத்தில் உள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சர்வதேச புலம்பெயர்ந்தோர் நிறுவகத்தின் தலையீட்டின் ஊடாக இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் மியன்மாரில் இருந்து தாய்லாந்துக்கு அழைத்து வரப்பட்டு தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து தாய் எயார்வேஸின் TG-307 விமானத்தில் நேற்று (05) இரவு 11.09 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles