தனது 13 வயது மகளை வன்புணர்வு செய்த தந்தை ஒருவர் பகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பக்வந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேம்பியன் தோட்டம் மேல் பகுதியில் வசிக்கும் 13 வயதுடைய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 44 வயதுடைய தந்தை ஒருவர் இன்று (06) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியின் தாயார் கொழும்பில் உள்ள வீடொன்றில் பணிபுரிந்து வருவதுடன், விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த போது சிறுமி தனது தாயிடம் இதுபற்றி கூறியுள்ளார்.
இதனடிப்படையில், தாய் பகவந்தலாவ பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக திக் ஓயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.