Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாணாமல் போன மாணவர்கள் நால்வரும் கண்டுபிடிப்பு

காணாமல் போன மாணவர்கள் நால்வரும் கண்டுபிடிப்பு

நோர்வூட் பிரதேசத்தில் அண்மையில் காணாமல் போன 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் நால்வர் ராகம பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், ராகம பொலிஸார் இந்த நால்வரையும் பொலிஸ் காவலில் எடுத்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நோர்வூட் சென் ஜோன் டில்லேரி தோட்டத்தில் வசிக்கும் இந்த நால்வரும் கடந்த 4ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக காணாமல் போன மாணவனின் தந்தையொருவர் நோர்வூட் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

காணாமற்போன அதே தோட்டத்தைச் சேர்ந்த நால்வரும் வேலை வாய்ப்பு தேடி ராகம பிரதேசத்தில் உள்ள உறவினரை சந்திப்பதற்காக ரயிலில் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாணவர்களும் ராகம பிரதேசத்தில் இருப்பதாக ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் நான்கு மாணவர்களையும் ராகம பொலிஸாரின் காவலில் எடுத்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles