அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
14 வயதுடைய குறித்த மாணவன் தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது தந்தையிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் ஜோர்ஜியா மாகாணத்தில் உள்ள பாடசாலையில் நடத்தப்பட்ட குறித்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 9 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மகனிடம் ஆயுதம் இருந்ததை கைதான தந்தை அறிந்திருந்த போதிலும், அதனைத் தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை என விசாரணையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.