பொதுமக்களுக்கான பிறப்பு, திருமணப்பதிவு மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான நிகழ்நிலை சான்றுறுதிப்படுத்தல் சேவையை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
2024, செப்டம்பர் 2, அன்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு பிறப்பு, திருமணப்பதிவு மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான நிகழ்நிலை சான்றுறுதிப்படுத்தல் சேவையின் தொடக்க விழாவை பதிவாளர் நாயகம் திணைக்களத்துடன் இணைந்து நிகழ்த்தியது.
இப்புதிய நிகழ்நிலை செயல்முறையின் மூலம், இலங்கை குடிமக்கள் தங்கள் பிறப்பு, திருமணபதிவு மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் சான்றுறுதிப்பாட்டிற்காக தூதரக விவகாரங்கள் பிரிவின் நிகழ்நிலை இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சான்றுறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படுவதுடன், விண்ணப்பிப்பது அல்லது சான்றுறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களின் சேகரிப்பு ஆகியவற்றை நேரில் சமுகமழித்து மேற்கொள்ளும் தேவையை நீக்குகிறது.