காலி, கிங்தோட்டை பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் இன்று (04) நபரொருவரின் காலின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த காலி மாநகர திடீர் மரண விசாரணை அதிகாரி ஒரு பாதத்தின் பகுதியை கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கால் பெண்ணுடையதா அல்லது ஆணுடையதா என்பது இதுவரையில் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.