உகாண்டா தடகள வீராங்கனை ஒருவர் அவரது காதலனால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் உடலில் 75 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் தொலைதூர ஓட்டப்பந்தயத்தில் 44 வது இடத்தைப் பிடித்த வீராங்கனையான ரெபேக்கா செப்டேஜி, மேற்கு டிரான்ஸ் நஸோயா கவுண்டியில் உள்ள அவரது வீட்டில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் போது, ரெபேக்கா செப்டேஜியின் காதலன், டிக்சன் என்டிமா பெட்ரோலை வாங்கி, அவர் மீது ஊற்றி எரித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.