காலி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பல நாள் படகு ஒன்று இன்று (03) அதிகாலை சர்வதேச கடற்பரப்பில் பயணித்த கப்பலுடன் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மூன்று மீனவர்களை காணவில்லை என துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.
‘நிஹதமாணி 01’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பலநாள் கப்பல் கடந்த 25ஆம் திகதி 7 மீனவர்களுடன் காலி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.
எவ்வாறாயினும், காலிக்கு தெற்கே ஆழமான சர்வதேச கடலில் 265 கடல் மைல் தொலைவில் பயணித்த கப்பலுடன் மோதியதில் இந்த மீன்பிடி கப்பல் ஆபத்தில் சிக்கியுள்ளது.
படகு கவிழ்ந்ததில் மீனவர்கள் அனைவரும் கடலில் விழுந்துள்ளதுடன், அதில் 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர். ஏனைய மூவரும் காணவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க கடற்படையினர் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.