சீனாவின் ஷான்டொங் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பாடசாலை மாணவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதிக்கு அருகில் நின்றிருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் மேலும் 13 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விபத்து தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.