ஒரு கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கல்பிட்டி பகுதியில் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்பிட்டி, சின்னக்கொடியிருப்புவ பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது ஒரு கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் கெப் வண்டியொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 4 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.