ஜப்பானின் யொகோஹாமா நகரில் உள்ள கட்டமொன்றில் இருந்து குதித்து பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் கட்டிடத்தில் இருந்து குதித்தபோது, பாதையில் நடந்து சென்ற பெண்ணொருவர் மீது விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குறித்த இருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய நாட்களை விட செப்டம்பர் முதலாம் திகதி ஜப்பானில் 18 வயதுக்குட்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக ஜப்பானிய அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
கடந்த ஆண்டு, 513 ஜப்பானிய மாணவர்கள் பாடசாலை பிரச்சினைகளால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.