Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டு345 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

345 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

புத்தளம் – எரம்புகொடல்ல மற்றும் கற்பிட்டி , கப்பலடி ஆகிய பகுதிகளில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் 31 ஆம் திகதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடமேற்கு கட்டளையின் விஜய கடற்படையினர் புத்தளம் – எரம்புகொடல்ல களப்பு பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறித்த களப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மிதந்துகொண்டிருந்த 4 உர மூடைகளை கைப்பற்றிய கடற்படையினர் அதனை சோதனை செய்தனர்.

இதன்போது குறித்த 4 உர மூடைகளில் இருந்து 169 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கற்பிட்டி – கப்பலடி களப்பு பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட மற்றுமொரு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது, குறித்த களப்பு பகுதியில் மிதந்துகொண்டிருந்த 5 உரமூடைகளை கைப்பற்றிய கடற்படையினர் அதனை சோதனைக்கு உட்படுத்தினர்.

குறித்த 5 உர மூடைகளில் இருந்து 176 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இரண்டு பிரதேசங்களிலும் ஒரே நாளில் கடற்படையினர் மேற்கொண்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போது 5 உர மூடைகளிலும் 345 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த பீடி இலைகளை கடல்மார்க்கமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு எடுத்து வந்திருக்கலாம் எனவும் கடற்படையினரின் கெடுபிடிகளால் சந்தேக நபர்கள் பீடி இலைகள் அடங்கிய உரமூடைகளை களப்பு பகுதிகளில் கைவிட்டு விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 345 கிலோ கிராம் பீடி இலைகள் அடங்கிய 9 உரமூடைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் வைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Keep exploring...

Related Articles