நேற்றைய தினம் காணாமல் போன ரஷ்யாவின் எம்ஐ-8டி ரக ஹெலிகொப்டர் கிழக்கு கம்சட்கா பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
3 பணியாளர்கள் உட்பட 22 பேருடன் பயணித்த குறித்த ஹெலிகொப்டர் கிழக்கு கம்சட்கா பகுதியில் வைத்து காணாமல் போயிருந்தது.
இதனையடுத்து குறித்த ஹெலிகொப்டர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து 17 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.