தெஹியத்தகண்டிய, சேறுபிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இன்று (30) காலை கொலை செய்யப்பட்டுள்ளார்.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
சேறுபிட்டிய, தெஹியத்தகண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான தந்தை தனது மகன் மற்றும் மருமகளை கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்த குற்றத்தை செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.