ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்ட பாலித ரங்கே பண்டார, இன்று (30) சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தாம் இராஜினாமா செய்துள்ளதாக பல்வேறு ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் தெரிவித்த போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தாம் இதுவரை உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்யவில்லை என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக தமக்கு அறிவிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.