இடுப்பில் போத்தலை மறைத்துக்கொண்டு வீதியில் பயணித்த நபரொருவர் பாதையில் விழுந்துள்ளார்.
இதன்போது போத்தல் உடைந்து அதன் ஒரு பகுதி அவரின் வயிற்றில் குத்தி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
காயமடைந்த குறித்த நபர் மீகஹகிவுல மாவட்ட வைத்தியசாலையில் இன்று (30) காலை அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அகிரிய கிராமத்தைச் சேர்ந்த 52 வயதுடையவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
நண்பருடன் நடந்து செல்லும்போதே அவர் இவ்வாறு பாதையில் தடுக்கி விழுந்துள்ளார்.
உடனடியாக செயல்பட்ட குறித்த நபரின் நண்பர் வயிற்றில் சிக்கியிருந்த உடைந்த போத்தலை பகுதியை வெளியே இழுத்துள்ளதுடன், ரத்தம் வழிந்தபடி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.