Thursday, January 16, 2025
25.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவவுனியாவில் குடும்ப பெண் கடத்தல்: 4 பேர் கைது

வவுனியாவில் குடும்ப பெண் கடத்தல்: 4 பேர் கைது

வவுனியாவில் இருந்து குடும்ப பெண் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, கொக்குவெளி, அரசடி வீதியில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவரை யாழ்ப்பாணத்தில் இருந்து வேன் ஒன்றில் வந்த குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர்.

வீட்டில் இருந்த பெண்ணின் மாமியார் பெண்ணை தூக்கிச் சென்றவர்களை விரட்டிய போது அவரை உதைந்து விட்டு சென்றுள்ளனர்.

இதன்பின் மாமியார் வவுனியா தலைமைப் பொலிசிஸ் நிலை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமையஇ தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் குறித்த வாகனம் சென்ற பாதையை பின் தொடாந்து சென்ற போது பளைப் பகுதியில் வைத்து அதனை மடக்கிப் பிடித்துள்ளதுடன், பெண்ணையும் மீட்டுள்ளனர்.

இதன்போது கடத்தலுக்கு பயன்படுத்த வாகனம் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணியந்தோட்டம், இருபாலைஇ சுன்னாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நான்கு பேரையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles