Thursday, January 16, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தலுக்காக பொலிஸ் அதிகாரிகள் 54,000 பேர் கடமையில்

தேர்தலுக்காக பொலிஸ் அதிகாரிகள் 54,000 பேர் கடமையில்

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சங்க கரவிட்ட தெரிவித்தார்

பொது பாதுகாப்பு அமைச்சில் நேற்று 29ஆம் திகதி நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

13,000 க்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 45 க்கும் அதிகமான வாக்கு எண்ணும் நிலையங்கள் மற்றும் 3200 நடமாடும் வாகனங்கள் தேர்தல் காலத்தில் செயற்படுத்தப்படுவதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கரவிட்ட தெரிவித்தார்.

சட்டவிரோத சுவரொட்டிகள், கட்அவுட்கள் மற்றும் பதாகைகளை அகற்றுவதற்காக 1500 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத கட்அவுட்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் சங்க கரவிட்ட மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles