2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நுவரெலியா மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளுக்கு விண்ணப்பித்த அரச நிறுவனங்களுக்கு உரிய வாக்குச் சீட்டு விநியோகம் இன்று (29) ஆரம்பமாகியுள்ளது.
தபால் நிலையங்களில் பெறப்படும் தபால் வாக்குகள் அன்றைய தினம் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதோடு, தபால் வாக்குகள் முறையாக பெறப்பட்டதாக விநியோகஸ்தர்களும் நிறுவன தலைவரிடம் கையொப்பம் பெறுவார்கள்.
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தபால் மூல வாக்குகளின் எண்ணிக்கை 19,727 ஆகும்.