பாரிய போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் ஷிரான் பாசிக்கின் மகன் நதீன் பாசிக் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று (28) காலை டுபாயில் இருந்து நாட்டை வந்தடைந்த அவரை வெள்ளவத்தை பொலிஸார், குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் ஆகியோர் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவரை காரால் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அவர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.