Friday, October 31, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒரு தொகை கைப்பேசிகளுடன் ஒருவர் கைது

ஒரு தொகை கைப்பேசிகளுடன் ஒருவர் கைது

வரி செலுத்தாமல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெக்கிராவ, மரதன்கடவல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (28) காலை கரம்ப வீதித் தடுப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது கெப் வண்டியில் இந்த கைப்பேசி கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்பொது, 600 நொக்கியா கைப்பேசிகளும், 50 சாம்சங் ஸ்மார்ட் கைப்பேசிகளும் மீட்கப்பட்டன.

கைத்தொலைபேசிகள் பேலியகொட பிரதேசத்தில் அமைந்துள்ள நிறுவனத்திற்கு சொந்தமானது என கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பான எந்த ஆவணத்தையும் அவர் சமர்ப்பிக்காததால், கையடக்கத் தொலைபேசிகள் கையிருப்பு நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles