நாட்டின் போதைப்பொருள் வலையமைப்பின் ‘கோட்பாதர்’ என அழைக்கப்படும் ஷிரான் பாசிக்கின் மகன் நதீன் பாசிக் இன்று (28) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் தலைமறைவாக இருந்து நாட்டுக்கு வந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவருக்கு ஆபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.