தேசிய மக்கள் கட்சியின் விஞ்ஞாபனத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் அடிப்படை மாற்றத்தை மேற்கொள்வதாக உள்ளடக்கியமை மிகவும் ஆபத்தான நிலை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையானது DSA அடிப்படையிலானது எனவும், அதனை மீளாய்வு செய்து புதிய DSAக்கு மாற்றினால், வேலைத்திட்டம் அங்கு முடிவடையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.