எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பகுதி அல்லது முழுமையாக பார்வைக் குறைபாடு உள்ள வாக்காளர் அல்லது உடல் ஊனமுற்ற வாக்காளர்கள் வாக்குச் சாவடியில் வாக்குச் சீட்டில் குறியிட உதவியாளருடன் வருவதற்கான சட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட உதவியாளர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என்றும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், ஒரு வேட்பாளரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி பிராந்திய பிரதிநிதியாகவோ அல்லது வாக்குச் சாவடி பிரதிநிதியாகப் பணியாற்றாத நபராகவோ இருக்க வேண்டும்.
மேலும், உதவியாளர் எந்தவித விசேட தேவையும் இல்லாதவராக இருக்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.