15 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்திச் சென்றதாக கூறப்படும் 23 வயதுடைய இளைஞன் வனாத்தவில்லுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் – ஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 25ஆம் திகதி தனது மகள் பயிற்சி வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றதாகவும், எனினும் அவர் வீடு திரும்பவில்லை என சிறுமியின் தாய் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காதல் உறவு காரணமாக குறித்த இளைஞன் சிறுமியை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.