ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பட்டாசுகளுக்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பேரணிகள் மற்றும் நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான பட்டாசுகளின் உற்பத்திக்கு அதிக தேவை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நிறைவடைந்த பின்னர் வரும் அடுத்த சில நாட்களில் பட்டாசு தேவை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.