நெல் விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உர மானியத்தை அடுத்த போகத்தில் இருந்து அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒரு ஹெக்டேயருக்கு வழங்கப்படும் 15,000 ரூபாயாக இருந்த உர மானியம் 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளது.