இலங்கை கடற்படையின் புதிய பிரதம அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நேற்று (26) கடற்படைத் தலைமையகத்தில் ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடவிடம் நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.
அவர் தனது சேவையின் போது இலங்கை கடற்படையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
மேலும் விரைவு தாக்குதல் ரோந்து கப்பல்களின் கட்டளை அதிகாரியாகவும் இலங்கை கடற்படை கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.