தேர்தல் சட்டத்தை மீறி கொழும்பு அருங்காட்சியகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் உள்ள மின்கம்பங்களில் சுவரொட்டிகளை ஒட்டிய இருவருக்கு 3,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (26) இந்த உத்தரவை பிறப்பித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குருந்துவத்தை பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாரஹேன்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ஆகிய பகுதிகளில் வசிக்கும் சந்தேகநபர்களுக்கு தலா 1,500 ரூபா அபராதம் விதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.