பாகிஸ்தானின் பலுகிஸ்தான் பகுதியில் துப்பாக்கி ஏந்திய கும்பலால் 23 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கி ஏந்திய நபர்கள் பஞ்சாபிற்குச் செல்லும் வாகனங்களைச் சோதனையிட்டபோது, அதில் பஞ்சாபைச் சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு சுட்டுக் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் 3 பேர் பலுகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்றவர்கள் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், சுமார் 10 லொறிகள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும், அவற்றின் சாரதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலங்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.