Thursday, January 16, 2025
26 C
Colombo
செய்திகள்உலகம்தொழிலாளர் உரிமை தொடர்பில் அவுஸ்திரேலியாவில் புதிய சட்டம்

தொழிலாளர் உரிமை தொடர்பில் அவுஸ்திரேலியாவில் புதிய சட்டம்

அவுஸ்திரேலியாவில் இன்று (26) முதல் ‘துண்டிக்கும் உரிமை’ சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டம் மூலம் பணியாளர்கள் பணி நேரம் முடிந்ததும் வேலை தொடர்பான குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களை புறக்கணிக்கவும் பதிலளிக்காமல் இருக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது.

அதற்காக நிறுவன தலைவர்களுக்கு தண்டனை வழங்க முடியாது எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வேலைப்பளுவால் பணியாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்காமல் இருப்பதை தடுக்கவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய சட்டத்தை மீறும் பட்சத்தில், குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு அமைப்பின் தலைவர் அல்லது நிறுவனத்தின் தலைவர் 93,900 அவுஸ்திரேலிய டொலர்கள் வரை அபராதம் விதிக்க வேண்டும்.

அவுஸ்திரேலியாவைத் தவிர, ஐரோப்பாவில் உள்ள 20 நாடுகளில் இந்தச் சட்டம் பின்பற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வில், அவுஸ்திரேலிய பிரஜைகள் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 281 மணிநேரம் ஊதியம் இல்லாமல் கூடுதல் நேரம் வேலை செய்வதாக தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles