IMFஇன் ஆதரவை இலங்கைக்கு வழங்க வேண்டும் என்றால் புதிய பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவான புரிதலை கொண்டிருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் Crystalina Giorgio தெரிவித்துள்ளார்.
அவ்வாறானதொரு சூழ்நிலையில் IMF இன் ஆதரவை வழங்க முடியும் என அவர் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரம் தவறான நிர்வாகத்தின் விளைவாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையைக் கண்டு கவலையடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.