இலங்கைக்கு எதிரான எஞ்சிய 2 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் புதிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல் அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியுடனான ஏனைய போட்டிகளிலிருந்து இங்கிலாந்து அணியின் வேகபந்து வீச்சாளர் மார்க் வுட் விலகியுள்ளார்.
இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவருக்குத் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அவருக்குப் பதிலாக ஜோஷ் ஹல் இங்கிலாந்து குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.