எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கு டிஜிட்டல் தேர்தல் முறையை முயற்சிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (22) பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்காக முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்பின் கீழ் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுவேன் என நம்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.