Wednesday, January 15, 2025
25.5 C
Colombo
செய்திகள்வணிகம்10 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது சதொச

10 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது சதொச

பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

இதனால், இறக்குமதி செய்யப்படும் 425 கிராம் எடையுள்ள டின் மீன் ஒன்றின் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 500 ரூபாவாகும்.

அத்துடன், உள்ளூர் 425 கிராம் டின் மீன் ஒன்றின் விலை 450 ரூபாவாகவும், 155 கிராம் டின் மீன் ஒன்றின் விலை 270 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிலோ பயிறு விலை 890 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு வெங்காயம் கிலோ ஒன்றின் விலை 470 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

வெள்ளை சீனி மற்றும் காய்ந்த மிளகாய் கிலோ ஒன்றின் விலையும் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், நெத்தலி விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 925 ரூபாவாகும்.

ஒரு கிலோ உள்ளூர் சம்பாவின் விலையை 226 ரூபாவாகவும் ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலையை 439 ரூபாவாகவும் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles