அத்தியாவசிய அரச பணியாளர்களை மாத்திரம் இன்று முதல் வேலைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்று நிரூபம், அரச நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டது.
அதன்படி நிறுவன பிரதானிகள் வேலைக்கு அழைக்க வேண்டிய ஊழியர்கள் தொடர்பில் தீர்மானித்து ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை ஏற்றம், போக்குவரத்து இன்மை போன்ற காரணிகளால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.