முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் மீதான வழக்கு இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடுமையான மனநோய், இதயநோய், புற்று நோய் போன்ற உடல் நலக்குறைவுகளால் தங்கள் தரப்பினர் பாதிக்கப்பட்டிருப்பதால், தேவையான மருத்துவ சிகிச்சைகளை விரைவில் வழங்க வேண்டும் என்று சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இது தொடர்பான கோரிக்கைகளை மனு மூலம் அறிவிக்குமாறு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.