இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் தமது பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அத்தியாவசியத் தேவைக்கு அன்றி பணியிடத்தை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், தமது பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துமாறும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.