Friday, March 14, 2025
25.6 C
Colombo
செய்திகள்உலகம்ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானமைக்கான காரணம் வெளியானது

ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானமைக்கான காரணம் வெளியானது

மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை அந்நாட்டு அரசு தொடர்பான செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

மோசமான வானிலை மற்றும் விமானத்தின் எடையை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் இடம்பெற்ற இந்த விபத்தில் ஈரான் ஜனாதிபதி உட்பட சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், விமானம் தாக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் வெளிப்புற தொந்தரவுகள் ஏற்பட்டதா என்பது தெரியவரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த ஹெலிகொப்டரி; ​​நிர்ணயிக்கப்பட்ட அளவை விட இரண்டு பேர் அதிகமாக பயணித்துள்ளதாக தெரியவந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles