Friday, March 14, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி தேர்தலுக்கான அச்சிடும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலுக்கான அச்சிடும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை அரச அச்சகம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

அதன்படி, அச்சகப் பணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த வாக்குச் சீட்டுகளின் முதல் தொகுதி தபால் மூலம் வாக்களிக்கும் நாளுக்கு முன்னதாக தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு 28 அங்குல நீளமானது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles