Friday, March 14, 2025
25.6 C
Colombo
செய்திகள்உலகம்இந்திய பிரதமர் இன்று போலந்துக்கு

இந்திய பிரதமர் இன்று போலந்துக்கு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (21) போலந்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

2024 ஆம் ஆண்டில் புது டில்லி மற்றும் வார்சா இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்கின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

45 ஆண்டுகளுக்குப் பிறகு போலந்துக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் பயணம் செய்வது இதுவே முதல்முறை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஓகஸ்ட் 23ஆம் திகதி இந்தியப் பிரதமர் உக்ரைனுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles