Friday, January 17, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை - இந்திய படகு சேவையில் மாற்றம்

இலங்கை – இந்திய படகு சேவையில் மாற்றம்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவையில் போதியளவான முன்பதிவு இல்லாத காரணத்தினால் வாரத்தில் 3 நாட்களுக்கு கப்பல் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் இந்த நடைமுறை காணப்படும் எனவும், பயணிகள் வருகை அதிகரிப்பின் அடிப்படையில், எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் நாளாந்தம் குறித்த கப்பல் சேவையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று தினங்களில் மாத்திரமே கப்பல் சேவை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles