Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுO/L பரீட்சை நிறைவடைந்தவுடன் பேருந்து சேவைகள் இடம்பெறாதாம்

O/L பரீட்சை நிறைவடைந்தவுடன் பேருந்து சேவைகள் இடம்பெறாதாம்

க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் பேருந்து சேவைகளிலிருந்து விலகுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில்,

பேருந்து ஒன்றுக்கு 100 லீற்றர் டீசல் தருவதாயின் 1000 ரூபா இலஞ்சமாக பெறப்படுகிறது. இது தொடர்பில் பேருந்த சாரதிகள் முறைப்பாடு அளித்துள்ளனர்.

பேருந்துகளுக்கு விலை கட்டுப்பாடின்றி எரிபொருள் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சில எரிபொருள் நிலையங்களில் அது செயற்படுவதில்லை.

இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாவிடின், பேருந்து சேவையிலிருந்து விலக நேரிடும்.

தற்போது சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படாது.

அத்துடன்,ஜூலை மாதமும் பேருந்து கட்டணத்தில் திருத்தம் ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles